நுண் அண்டம் (சிறு கதை)
நடந்ததை புரிந்து கொள்ள கொஞ்சம் நேரம் பிடித்தது ! நாங்கள் இரு நூற்று எட்டு பேர் இருந்தோம் . புது விதமான பயண முறைகள் பல உலகங்களில் தோன்றி நெடு நாட்கள் ஓடி விட்டன . ஆனாலும் , ஒவ்வொரு பயணத்திலும் நாம் சந்திக்கின்ற பிரச்சனைகள் இந்த அண்டத்தை புரிந்து கொள்ளுவதில் நமக்கு பெரிய உதவியாக இருக்கிறது . ஏறக்குறைய ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் , அடுத்துள்ள கிரகத்தின் புவி ஈர்ப்பு சக்தியை பயன் படுத்தி , மனித இனம் ஒரு கிரகத்தில் இருந்து இன்னொரு கிரகத்திற்கு பயணித்தார்கள் . இன்று பல ஆயிரம் ஒளி வருடங்களை கூட வால் நட்சத்திரங்கள் போன்ற விண் கோள்களை ஒட்டிக் கொண்டு பல உயிரனங்கள் சென்று வருகின்றன . ஏன் , நம் பூமிக்குக் கூட முதல் உயிரனம் அப்படித்தான் வந்து இருக்கும் என்று பலரும் நம்புகிறார்கள் . நாங்கள் எங்கள் இருப்பிடத்தை விட்டு கிளம்பியவர்கள் அல்ல . என்னுடைய மூன்றாவது முறை தாத்தா , அதாவது என் தாத்தாவின் அப்பா , எனது மூன்றாவது முன்னோடி தாத்தா , அந்த தாத்தா தான் , இருப்பிடத்தை விட்டு கிளம்பியவர் . இருப்பி...